» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆதிகேசவபெருமாள் கோவிலில் நகைகள் திருடிய வழக்கு : 23 பேருக்கு சிறை தண்டணை

வெள்ளி 20, செப்டம்பர் 2019 11:58:48 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவபெருமாள் சிலையில் இருந்த நகைகளை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில் 23 பேருக்கு சிறை தண்டணை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த கோவிலின் மூலவரான ஆதிகேசவ பெருமாள் தங்க நகைகளும், தங்க தகடுகளால் ஆன கவசமும் அணிவிக்கப்பட்ட நிலையில் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை கோவிலில் பூஜை செய்த போத்திகளும், தேவசம்போர்டு ஊழியர்கள் உள்ளிட்டோரும் சேர்ந்து திருடியதாக 1989, 1990-ம் ஆண்டுகளில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கோவிலில் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடியது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 25 ஆணடுகளாக பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் குற்றவாளி என தீர்ப்பளித்து அவர்களுக்குரிய தண்டனையை தனித்தனியாக நீதிபதி அறிவித்தார்.

திருவட்டாரை சேர்ந்த ஸ்ரீஅய்யப்பன் (75), கோபாலகிருஷ்ணன் ஆசாரி (77), கோபிநாதன் (86), கிருஷ்ணம்பாள் (75), முத்துக்குமார் (47), முத்துநாயகம் (61), வேலப்பன் நாயர் (73), மாத்தூரை சேர்ந்த சுப்பிரமணியரு(69), தோவாளை மகாராஜ பிள்ளை (80), குலசேகரம் கோபாலகிருஷ்ணன் (79), தச்சநல்லூரை சேர்ந்த சங்கரகுற்றாலம் (88), கண்ணுமாமூடு அப்புகுட்டன் (67), நட்டாலம் குமார் (51), மயிலாடுதுறையை சேர்ந்த முருகப்பன் (77) ஆகிய 14 பேருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவட்டாரை சேர்ந்த சுரேந்திரன் (59), ஜனார்த்தனன் போற்றி (66), மணிகண்டன் நாயர் (56), லட்சுமணன் (60), செம்பருத்திவிளை கேசவராஜூ (62), புதுக்கடை அய்யப்பன் ஆசாரி (72), தேங்காப்பட்டணம் ஆறுமுகம் ஆசாரி (69), பூட்டேற்றி அப்பாவு (75), கரமனையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆசாரி என்ற ராஜய்யப்பன் (62) ஆகிய 9 பேருக்கு 3 வருடம் ஜெயில் தண்டனையும், தனித்தனியாக அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory