» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அச்சுறுத்தும் விஷ வண்டுகளால் அச்சத்தில் பொதுமக்கள்

வியாழன் 19, செப்டம்பர் 2019 8:21:55 PM (IST)

தக்கலை அருகே பனை மரத்தில் இருக்கும் விஷ வண்டுகள் பொதுமக்களை அச்சுறுத்துவதால் இதை அழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே முளகு மூடில் இருந்து பூவன்கோடு செல்லும் சாலையில் நல்ல பிள்ளை பெற்றான் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சாலையோரத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்வது வழக்கம்.இங்குள்ள ஒரு பனை மரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடந்தை என்ற விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இந்த வண்டுகள் கடித்தால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அது பற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
ஆனால் விஷ வண்டுகளை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அந்த விஷ வண்டுகளின் கூடு பெரியதாகி உள்ளது. மேலும் விஷ வண்டுகளும் அந்த பகுதியில் பறக்க தொடங்கி உள்ளது.தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே நடவடிக்கை எடுத்து இந்த விஷ வண்டுகளை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory