» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லாரிகள் வேலை நிறுத்தம் : ரூ. 2 கோடி வர்த்தகம் பாதிப்பு

வியாழன் 19, செப்டம்பர் 2019 5:53:38 PM (IST)

லாரிகள் ஸ்டிரைக் காரணமாக குமரி மாவட்டத்தில் 3500 லாரிகள் இயங்கவில்லை. இதனால் இன்று ஒருநாள் மட்டும் ரூ.2 கோடிக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய சாலை வாகன சட்டத்தின் மூலம் லாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு அதிகரித்து இருப்பதை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.லாரிகள் ஸ்டிரைக் காரணமாக குமரி மாவட்டத்திலும் லாரிகள் ஓடவில்லை. குமரி மாவட்டத்தில் லாரிகள், டெம்போ லாரிகள் உள்பட மொத்தம் 3500 உள்ளது. போராட்டம் காரணமாக இந்த லாரிகள் இன்று இயங்கவில்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வரக்கூடிய காய்கறிகள், வெங்காயம், வத்தல் போன்ற பொருட்கள் லாரிகள் மூலம் குமரி மாவட்டத்திற்கு தினமும் கொண்டு வரப்படும். அந்த லாரிகளும் இன்று குமரி மாவட்டத்திற்கு வரவில்லை. அதேப்போல குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு வர வேண்டிய காய்கறிகளும் இன்று வரவில்லை. இதுபோன்ற வர்த்தக முடக்கம் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் ரூ.2 கோடிக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் நாகராஜா கோவில் மைதானம் உள்பட பல இடங்களில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory