» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் 15 கிராம மீனவர்கள் போராட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2019 1:32:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கேரள மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன்களை பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 15 கிராம மீனவர்கள் மீன்களை விற்காமல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீரோடி முதல் மேல் மிடாலம் வரை உள்ள கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள், இரட்டை மடி வலைகளை கொண்டும், மிகப்பெரிய மற்றும் அதிவேக படகுகளைக் கொண்டும் கேரள மீனவர்கள் மீன்களை பிடிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், ஆதலால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கேரள மீனவர்களின் படகுகளை நிறுத்த அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இடப்பற்றாக்குறை உருவாகி தங்களின் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அதேநேரத்தில், கேரளாவில் தமிழக படகுகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அங்கு செல்லும் தமிழக படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர்.இந்த போராட்டத்தால் 2 கோடி ரூபாய் மதிப்புடைய மீன்களின் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார், அரசு அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு மீன் விற்பனையை மீனவர்கள் தொடர்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory