» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஓணம் பண்டிகையையொட்டி 1000 டன் பூக்கள் விற்பனை

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 6:03:04 PM (IST)

தோவாளை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பூக்களில் 1000 டன் பூக்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. அதிகமான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

தோவாளை பூ மார்க்கெட்டிற்கு ஓசூர், ராயக்கோட்டை, சத்தியமங்கலம், பெங்களுரூ, சேலம், மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும், நெல்லை மாவட்டம் பழவூர், ஆவரைகுளம், சங்கரன்கோவில், குமார புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று இரவு தோவாளை பூ மார்க்கெட் களைகட்டி இருந்தது. விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடந்தது. இன்று காலையிலும் பூக்களை வாங்குவதற்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.பூக்கள் விற்பனைக்காக வெளியூர்களில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டிருந்தது. சுமார் 2 ஆயிரம் டன் பூக்கள் விற்பனைக்கு வந்திருந்தது. கலர் பூக்களே அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது.

பூக்கள் வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை குறைவாகவே இருந்தது. வியாபாரிகளும் குறைவாகவே வந்திருந்தனர். இதனால் பூக்கள் விற்பனையும் மந்தமாக காணப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூக்கள் லாரிகளில் இருந்து இறக்காமல் அப்படியே நிறுத்தியிருந்தனர்.நள்ளிரவு பூக்கள் விற்பனை செய்த விலையை விட இன்று காலையில் விலை குறைந்து காணப்பட்டது. விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பூக்களில் 1000 டன் பூக்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. அதிகமான பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory