» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேலை : விண்ணப்பிக்க அழைப்பு

சனி 17, ஆகஸ்ட் 2019 12:56:14 PM (IST)

மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை  மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அமையவிருக்கும் நீர்;வாழ் உயிரின ஆய்வுக்கூடத்திற்கு (கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு  ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.08.2019 அன்று மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நாகர்கோவிலில் நடைபெறவிருக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு மீன்துறை உதவி இயக்குநர், நாகர்கோவில் அலுவலகத்தை அணுகுவேண்டுமென  என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.அணுக வேண்டிய முகவரி:மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்டி ஸ்டில்லரி ரோடு,வடசேரி, நாகர்கோவில் -1.தொலைபேசி எண்: 04652 - 227460. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory