» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் நிறுத்தத்துக்கு புதிய எம்.பி நடவடிக்கை : ரயில் பயணிகள் சங்கம் வயியுறுத்தல்

திங்கள் 24, ஜூன் 2019 12:51:09 PM (IST)

குழித்துறையில் ரயில் நிறுத்தத்துக்கு புதிய எம்.பி நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் சங்கம் வயியுறுத்தியுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் வெளிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ரயில் நிலையம் குழித்துறை(மார்த்தாண்டம்) ஆகும். குழித்துறை ரயில்நிலையம் 12 லட்சங்கள் மக்கள் தொகை கொண்ட கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகாவில் உள்ள பொதுமக்களுக்கு ரயில் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக உள்ளது. குழித்துறை ரயில் நிலையத்தில் தற்போது இந்த வழியாக இயக்கப்படும் ரயில்களில் திருநெல்வேலி – ஜாம்நகர் வாரம் இருமுறை, நாகர்கோவில் - காந்திதாம் வாராந்திர ரயில், கன்னியாகுமரி – திப்ருகர் வாராந்திர ரயில்,  நாகர்கோவில் - ஷாலிமர் வாராந்திர ரயில்,  திருநெல்வேலி – காந்திதாம் ஹிம்சாபர் வாராந்திர ரயில் ஆகிய ரயில்கள் நிறுத்தம் இல்லாமல் இயக்கி வருகிறது.  

இதற்கு முன்பு இந்த ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்பட்ட ரயில்களுக்கு நிறுத்தம் இல்லாமல் இயங்கி வந்த நாகர்கோவில் - மங்களுர் ஏரநாடு ரயில், கன்னியாகுமரி – வைஷ்ணதேவி கத்ரா ஆகிய இரண்டு ரயில்களுக்கும் கடந்த காலங்களில் தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த ஐந்து வருடத்துக்கு ஒரு ரயிலுக்கு கூட புதிய நிறுத்தங்கள் அனுமதிக்கப்படவில்லை. புதிதாக நீட்டிப்பு செய்யப்பட்ட இன்டர்சிட்டி ரயில் நீட்டிப்பு செய்து இயக்கும் போதே நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. 

திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களுர், கோவா, மும்பை வழியாக குஜராத் மாறிலத்தில் உள்ள ஜாம்நகர்க்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்பட்டு வரும் ரயில் திருவனந்தபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் முயற்சியால் பாறசாலை ரயில் நிலையத்தில் நின்று சென்று வருகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் மர்க்கத்தில் இடையே உள்ள ரயில் நிலையங்களில் அதிக வருவாய் தரும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிற்காமல் கேரளாவில் உள்ள பாரசாலை ரயில் நிலையத்தில் நின்று செல்வது குமரி மாவட்டத்தை புறக்கணிப்பதாகவே உள்ளது. 

கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் குழித்துறை ரயில் நிலையம் வழியாக இயங்கிவரும் ரயில்களில் கொங்கன்வழியாக செல்லும் நாகர்கோவில் - காந்திதாம், திருநெல்வேலி – ஜாம்நகர் ஆகிய இரண்டு ரயில்களுக்கு நிறுத்தம் வாங்க நடவடிக்கை எடுத்து உடனடியாக ரயில்வே அமைச்சரை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகாவை சார்ந்த பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory