» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவிற்கு கடத்திய 1300 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்

திங்கள் 24, ஜூன் 2019 10:40:35 AM (IST)

அனந்தபுரி விரைவு ரயிலில் கேரள மாநிலத்துக்கு கடத்தப்பட்ட சுமால் 1350 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அத்தியாவசிய ரேஷன் பொருள்களான அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு போன்ற பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர், உணவு கடத்தல் தடுப்புப்பி ரிவு போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். 

இதில், சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் 55 மூட்டைகளில் 1350 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது.  இதையடுத்து அரிசியை போலீஸார் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து  ரேஷன்அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory