» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாடகை தொடர்பான புகார் குறித்து பதிவு செய்யலாம் : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 22, மே 2019 1:59:22 PM (IST)

வாடகை தொடர்பான புகார் குறித்து பதிவு செய்யலாம் என கன்னியாகுமரி ஆட்சியர் பிரசாந்த்வடநேரே அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு ஆணையின்படி தமிழ்நாடு சொத்து உடைமைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017 ஆனது 22.02.2019-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி சட்டப்பிரிவு 30-ன்கீழ் கோட்ட அளவில் வாடகை தொடர்பான அதிகாரம் பெற்ற அலுவலர் ஒருவரை நியமித்து ஆணையிட தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாடகை தொடர்பான அதிகாரம் பெற்ற அலுவலர்களும், அவர்களுக்கான வட்டங்களும் மாவட்ட ஆட்சித்தலைவரால் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. 

நாகர்கோவில் சார் ஆட்சியர் ,வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு சந்திரன், அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களும், பத்மனாபபுரம் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஷரண்யா அறி , கல்குளம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் வட்டங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாடகைதாரர்கள் மற்றும் நிலஉரிமைதாரர்கள் மேற்படிபொருள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து www.tenancy.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory