» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஏப். 27-ல் கையெழுத்தாகிறது
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:14:18 PM (IST)

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி கையெழுத்தாக உள்ளதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்த 2025 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தை, அதே ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, வரும் திங்கள்கிழமை (ஏப். 27) இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகிறது.
முக்கிய நோக்கங்கள்:
நியூசிலாந்தில் இந்தியப் பொருட்களுக்குக் கட்டணமில்லா சலுகை வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் டாலர் முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சுகாதாரம், கல்வி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளைச் சேர்ந்த 5,000 இந்திய வல்லுநர்களுக்குத் தற்காலிக வேலைவாய்ப்பு விசா வழங்கப்படும்.
வரிச் சலுகைகள் மற்றும் கட்டுப்பாடுகள்: இந்தியாவின் விவசாயம் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்கும் வகையில், நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள் (பால், தயிர், சீஸ் போன்றவை), வெங்காயம், சர்க்கரை, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் ரப்பர் ஆகியவற்றிற்கு இந்தியா வரிச் சலுகை அளிக்கவில்லை. இருப்பினும், நியூசிலாந்திலிருந்து இறக்குமதியாகும் ஆட்டிறைச்சி, கம்பளி, நிலக்கரி மற்றும் மரப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்! – கட்டிடங்கள் சேதம்; கடலோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 11:25:20 AM (IST)

இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)


