» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சோவியத் யூனியன் வெற்றி தினம்: 3 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்தார் ரஷிய அதிபர் புதின்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:35:33 AM (IST)
இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர்புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் நிரந்தர போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷியாவையும் உக்ரைனையும் அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தை புதின் ஒருதலைபடசமாக அறிவித்துள்ளார்.இது குறித்து ரஷிய அதிபர்மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜொ்மனியை ரஷியா வெற்றி கொண்டதை முன்னிட்டு மே 8 முதல் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, உக்ரைனில் 72 மணி நேரத்துக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்தப் போர்நிறுத்தம், மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவடைகிறது. உக்ரைனும் இந்த போர்நிறுத்தத்தை பின்பற்றும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் விமா்சனம்: ஏற்கெனவே, டிரம்ப் முன்வைத்துள்ள 30 நாள் போர்நிறுத்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள உக்ரைன், புதினின் இந்த 3 நாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று விமா்சித்துள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர்ஆண்ட்ரி சிபிஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போர்நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு முன்னதாக, ஈஸ்டர்தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போர்நிறுத்தத்தக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் அறிவித்தது. இருந்தாலும், போர்நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாககுதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.
அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று ரஷியாவும், உக்ரைனும் அமெரிக்கா முன்னிலையில் கடந்த மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறியதாக ரஷியா மீது உக்ரைனும், உக்ரைன் மீது ரஷியாவும் அடிக்கடி குற்றஞ்சாட்டின. இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போர்வெற்றி விழாவை முன்னிட்டு உக்ரைனில் 3 நாள்களுக்கு போரை நிறுத்திவைப்பதாக தற்போது விளாதிமீர்புதின் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)


.gif)