» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷேக் ஹசினாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடிய வங்கதேச இடைக்கால அரசு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:41:11 AM (IST)
ஷேக் ஹசினாவை கைது செய்ய வங்காளதேசத்தின் இடைக்கால அரசு சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துஉள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்பட பல்வேறு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்துஉள்ளது. இதையடுத்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே வங்காளதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக ஷேக் ஹசீனா மீதும் அவரது ஆதரவாளர்கள் 72 போ் மீதும் டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கோரி வங்காளதேச காவல்துறை சர்வதேச போலீசான இன்டர் போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் 11 பேர் மீது நோட்டீஸ் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக் கயை வங்காளதேச காவல் துறையின் தேசிய மத்திய பணியகம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ஷேக் ஹசீனா மீதான விசாரணைகளின் போது அல்லது நடந்து கொண்டிருக்கும் வழக்கு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பாக இந்த விண்ணப்பங்கள் இன்டர்போலிடம் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தப்பியோடியவர்களின் இருப்பிடங்களை அடையாளம் காண்பதில் இன்டர்போல் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவை அவமதிக்கும் சமூக ஊடக பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூர் அரசு நடவடிக்கை
ஞாயிறு 7, ஜூன் 2026 11:20:56 AM (IST)

ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)


