» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாத தாக்குதல் : 15 பேர் உயிரிழப்பு
வியாழன் 2, ஜனவரி 2025 8:49:54 AM (IST)

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டத்துக்குள் வாகனம் புகுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நேற்று பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. அங்குள்ள சுற்றுலா நகரான நியூ ஆர்லியன்சில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்ற இடமான போர்பான் தெருவில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். நள்ளிரவில் ஒரு கார், எதிர்பாராதவிதமாக புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் புகுந்தது. ஏராளமானவர்கள் மீது கார் மோதியது.
இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள 5 மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். தாக்குதல் நடத்திய காரில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கொடி பறந்ததாகக் கூறப்படுவதால் பதற்றம் நிலவுகிறது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டது சம்சத் தின் ஜபார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் என்று தெரியவந்துள்ளது.
அது மட்டுமட்டலாது வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியும் இருந்தது. வாகனத்தில் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நபர் நிச்சயமாக இத்தாக்குதலை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை. இவருக்குப் பின்னணியில் இரண்டு பேர் இருந்துள்ளனர் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ சந்தேகிக்கிறது. அதனால் தீவிரவாத தாக்குதல் என்ற கோணத்திலேயே இந்த சம்பவத்தை எஃப்பிஐ விசாரிக்கிறது. ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வாகனம் புகுந்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை: நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 5:13:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!
வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)

பஹல்காம் தாக்குதல்: ஷாங்காய் மாநாடு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 11:06:18 AM (IST)

இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் : மீண்டும் சொல்கிறார் டிரம்ப்!
வியாழன் 26, ஜூன் 2025 5:26:04 PM (IST)
