» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நலமுடன் இருக்கிறார்: மருத்துவமனை விளக்கம்
திங்கள் 30, டிசம்பர் 2024 11:48:57 AM (IST)
அறுவை சிகிச்சை செய்து கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், வரும் நாட்களில் அவர் கண்காணிப்பில் இருப்பார்" என்று ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, நேதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, மார்ச் மாதத்தில், நேதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், நேதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை அவரது உடலில் பொருத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பரஸ்பர வரிவிதிப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை: டொனால்டு டிரம்ப்
திங்கள் 30, ஜூன் 2025 4:50:14 PM (IST)

மனைவி விவாகரத்தால் விரக்தி : ஓடும் ரயிலுக்குள் தீவைத்த 67 வயது நபர் கைது!
சனி 28, ஜூன் 2025 12:23:38 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை: நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 5:13:47 PM (IST)

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் டிரம்ப் தகவல்!
வெள்ளி 27, ஜூன் 2025 5:05:09 PM (IST)

பஹல்காம் தாக்குதல்: ஷாங்காய் மாநாடு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 11:06:18 AM (IST)

இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன் : மீண்டும் சொல்கிறார் டிரம்ப்!
வியாழன் 26, ஜூன் 2025 5:26:04 PM (IST)
