» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம்
சனி 28, செப்டம்பர் 2024 3:47:08 PM (IST)

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் அலி கர்கி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்து இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. மேலும் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இத்தகைய தொழில்நுட்பத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)
