» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம் அதிகரிக்கும் : டிரம்ப் குற்றச்சாட்டு
திங்கள் 29, ஜூலை 2024 12:48:52 PM (IST)
கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம், குழப்பம் அதிகரிக்கும் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.இந்த நிலையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப், கமலா ஹாரிசை கடுமையாக தாக்கி பேசினார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது: தீவிர தாராளவாத கொள்கை கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் அவர் நம் நாட்டிற்கு குற்றம், குழப்பம் மற்றும் மரணத்தை வழங்குவார். அதே சமயம் நான் அதிபரானால் அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியை மீட்டெடுப்பேன்.
அதிபராகும் முதல் நாளில் பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் ஒவ்வொரு திறந்த எல்லை கொள்கையையும் முடிவுக்கு கொண்டு வருவேன். நாங்கள் எல்லையை பூட்டுவோம். நாம் நாட்டிற்குள் பயங்கரமான படையெடுப்பை நிறுத்துவோம். கமலா ஹாரிஸ் மாவட்ட வக்கீலாக பணியாற்றி சான் பிரான்சிஸ்கோவை அழித்தார். அவர் அதிபரானால் நம் நாட்டை அழிப்பார்.
அமெரிக்க வரலாற்றில் மிகவும் திறமையற்ற, செல்வாக்கற்ற மற்றும் தீவிர இடதுசாரி துணை அதிபர் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீவிர இடதுசாரி அவர்தான்.இவ்வாறு டிரம்ப் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் மிக உயரமான பாலம் அழிவு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 3:51:00 PM (IST)

பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்களை அமெரிக்கா எதிர்பார்க்கலாம்: ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:31:27 PM (IST)

ரஷ்யாவில் பயங்கரம்: மலைச்சரிவில் மோதி ராணுவ விமானம் விபத்து – 29 பேர் உடல் சிதறி பலி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:49:43 AM (IST)

ஈரான் தாக்குதலில் குவைத் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்: இந்தியத் தொழிலாளி உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:34:14 PM (IST)

அமெரிக்கா - ஈரான் போர்: மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு ஈரான் மறுப்பு..!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:32:25 PM (IST)

அமெரிக்காவை அதிரவைத்த வடகொரியா: 15,000 கி.மீ தொலைவு பாயும் ஏவுகணை சோதனை வெற்றி!
திங்கள் 30, மார்ச் 2026 9:26:02 AM (IST)

