» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆயுத உதவி கிடைத்திருந்தால் ரஷியாவின் தாக்குதலை தடுத்திருக்க முடியும்: உக்ரைன்

வியாழன் 18, ஏப்ரல் 2024 11:40:08 AM (IST)

மேற்கத்திய நாடுகள் உரிய காலத்தில் ஆயுதங்களை கொடுத்திருந்தால் ரஷியாவின் தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

வடக்கு உக்ரைன் நகரான செர்னிஹிவ் மீது புதன்கிழமை ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அடுத்தடுத்து 3 ஏவுகணைகள் 8 மாடிக் கட்டடத்தின் மீது விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 குழந்தைகள் உள்பட 61 பேர் படுகாயங்களுடன் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா - பெலாரஸ் எல்லையில் அமைந்துள்ள செர்னிஹிவ் மாகாணத்தில் 2.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடன் உதவியுடன் உக்ரைன் சமாளித்து வந்தாலும், ரஷியாவின் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றது. குளிர்காலத்தை கருத்தில் கொண்டு தீவிர போரை நடத்தாமல் இருந்த ரஷியா, உக்ரைனின் ஆயுத தட்டுப்பாட்டை அறிந்து தற்போது போரில் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ள 80 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளுக்கு இன்னும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் உக்ரைன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் உரிய காலத்தில் ஆயுதங்களை கொடுத்திருந்தால் செர்னிஹிவ் மீதான தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory