» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமியை நெருங்கும் அரிய வால்நட்சத்திரம்: 70 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு!

புதன் 3, ஏப்ரல் 2024 10:32:17 AM (IST)



70 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

'வால் நட்சத்திரம்' என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரிய குடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது.

இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது.

சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' வால்நட்சத்திரமானது 1385-ம் ஆண்டு சீனாவிலும், 1457-ம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095-ல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory