» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாலத்தீவுக்கு உதவிய முதல் நாடு இந்தியா : எதிா்க்கட்சி தலைவா் அப்துல்லா ஷாஹீத்

செவ்வாய் 27, பிப்ரவரி 2024 10:38:59 AM (IST)

மாலத்தீவு நாட்டின் பிரதான எதிா்க்கட்சி தலைவரும், ஐ.நா. பொதுச் சபையின் முன்னாள் தலைவருமான அப்துல்லா ஷாஹீத் தெரிவித்துள்ளார். 

சீன ஆதரவாளராகக் கருதப்படும் முகமது மூயிஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றாா். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டுள்ளனா். 

அந்த வீரா்களை மாா்ச் 15-க்குள் திரும்பப் பெறுமாறு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளாா். இதனால் மாலத்தீவு, இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாலத்தீவு ஊடகத்துக்கு அந்நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியின் புதிய தலைவா் அப்துல்லா ஷாஹீத் அளித்துள்ள பேட்டியில், ‘மாலத்தீவுடன் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மற்றும் பல வழிகளிலும் இந்தியா பிணைக்கப்பட்டுள்ளது. 

பூகோளம் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியான இந்தியாவிடம் இருந்து மாலத்தீவு விலகி இருக்க முடியாது.கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பின்போது உதவிய நட்பு நாடுகளில் இந்தியா முதலாவதாக இருந்தது.மாலத்தீவு தலைநகா் மாலியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டபோது சில மணி நேரங்களில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா தண்ணீா் அனுப்பியது. 

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது மாலத்தீவுக்கு உதவிய முதல் நாடு இந்தியா. கடந்த 60 ஆண்டுகளில் உலகில் பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் காரணமாக பயனடையக்கூடிய அனைத்து வழிகளையும் ஆராய்வதில், மாலத்தீவு அரசின் கொள்கைகள் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது மாலத்தீவின் வெளியுறவு கொள்கையில் அதிபா் மூயிஸ் அரசு மாற்றங்கள் செய்திருந்தாலும், இந்தியா உடனான உறவில் குழப்பத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தாா். தன்னை எதிா்க்கட்சி தலைவராக நியமிக்க இந்தியா ஆதரவு அளித்தது என்று வெளியான தகவலையும் அப்துல்லா ஷாஹீத் மறுத்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory