» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் வெற்றி: நிக்கி ஹாலேவை வீழ்த்தினார்!

திங்கள் 26, பிப்ரவரி 2024 8:53:11 AM (IST)

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியை தழுவினார்.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டில் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அங்கு வருகிற நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் முதலில் தங்களது கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும். அதில் பெரும்பான்மை பெற்றவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்காக அங்குள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகிய 2 கட்சிகளே உள்ளன. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே உள்ளிட்ட பலர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் தெற்கு கரோலினா மாகாணத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் டிரம்புக்கும், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலேவுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் டிரம்ப் வெற்றி பெற்றார். இது நிக்கி ஹாலேவின் சொந்த தொகுதி ஆகும். அவர் ஏற்கனவே அங்கு கவர்னராகவும் இருந்துள்ளார். முன்னதாக நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலிலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory