» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஜிமெயில் மூடல்? கூகுள் நிறுவனம் விளக்கம்!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:40:04 PM (IST)

ஜிமெயில் மூடப்படுவதாக சமூக ஊடங்களில் வேகமாகப் செய்திப் பரவி வரும் நிலையில், அதில் உண்மையில்லை என்று கூகுள் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஜிமெயில் மூடப்படுவதாக மட்டுமல்ல, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடங்குகிறது என்று தேதியோடு புரளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பொதுவாக பழைய சேவைகளை மற்றும் பயன்பாட்டில் இல்லாத சேவைகளைத்தான் கூகுள் முடக்கும். அதில்லாமல், அதனை புதுப்பொலிவுடன் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கும். 

ஆனால், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஜிமெயில் மூடப்படவிருப்பதாக புரளி ஒன்று வேகமாக அதுவும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. உலகம் முழுவதுமிருப்பவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைத்து வரும் ஜிமெயில் பயணம் விரைவில் நிறைவு பெறவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஜிபெயில் அதிகாரப்பூர்வமாக மூடப்படுகிறது. அதன் சேவை அது முதல் இருக்காது என்றும் அந்த புகைப்பட புரளி தெரிவிக்கிறது. இனி ஜிமெயில் மூலம் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இது உண்மை என நம்பி பலரும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கவலையும் வருத்தமும் அதிருப்தியும் அதிர்ச்சியும் தெரிவித்து பதிவுகளை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், இது குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது. ஜிமெயில் நிலைத்திருக்கும் என்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோரின் அதிர்ச்சியை இல்லாமல் ஆக்கும் வகையில் கூகுள் இது புரளி என்று விளக்கம் அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory