» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது அமெரிக்காவின் தனியார் விண்கலம்!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 11:14:46 AM (IST)



அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தின் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காக விண்கலங்களும் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவர்களையும் அனுப்பி ஆய்வு நடைபெற்று வருகிறது. அமெரிக்கா நிலவுக்கு மனிதனையே அனுப்பி சோதனை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வரும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாசா உதவியுடன் ஒடிஸியஸ் என்ற விண்கலத்தை தென் துருவம் அருகே தரையிறக்கியுள்ளது.

இந்த விண்கலத்தில் இருந்து சிக்னல்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் அமெரிக்காவை சேர்ந்த விண்கலம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்தில் இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory