» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை : பிப்ரவரி 1 முதல் அமல்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 5:26:42 PM (IST)



ஜெர்மனியில் வரும் பிப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. 

உலகில் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்கின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது. 

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீழ புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் பிப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது.  வாரத்தில் மூன்று நாள்கள் விடுமுறையும், நான்கு நாள்களுக்கு வேலையும் செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.

பல தொழிலாளர் சங்கங்கள் இந்த 4 நாள்கள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வாதித்து வந்தன. இந்நிலையில் அமலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை, நல்ல பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

வாரத்தில் 5 அல்லது 6 நாள்கள் வேலை செய்வதைவிட வாரத்தில் 4 நாள்கள் மட்டும் வேலை செய்வது ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் மேற்கொள்ளப்படுகிறது.  உற்பத்தித் திறனை அதிகரிப்பதன்மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.   

மேலும், பெல்ஜியத்தில் வாரத்திற்கு நான்கு நாள்கள் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். அதாவது, வாரத்தில் 40 மணிநேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை. இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory