» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி விலகல் : டொனால்டு டிரம்புக்கு ஆதரவு

புதன் 17, ஜனவரி 2024 11:06:58 AM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி, டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

இதற்கிடையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அத்துடன், தான் அதிபராக வந்தால் பல மாற்றங்களை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்து உள்ளார். டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதால், தான் விலகுவதாகவும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJan 18, 2024 - 02:37:47 AM | Posted IP 172.7*****

U.S.A உள்ள சுயேச்சை கேண்டிடேட் போல ரூவா வாங்கிட்டு எஸ்கேப்! ராமசாமி மாமா!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory