» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாய் இறைச்சி உண்பதற்கு தடை: தென் கொரியா நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

செவ்வாய் 9, ஜனவரி 2024 3:56:27 PM (IST)



தென் கொரியாவில் நாய் இறைச்சி உண்பதற்கு தடை விதித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே காலம் காலமாக நிலவி வருகிறது. அதே வேளையில் நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, சட்டம் கொண்டு வர தென்கொரிய அரசு முடிவு செய்தது. 

அதன்படி, தென்கொரிய நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மொத்தம் உள்ள 208 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நாய் கறி உண்பதற்கு தடை விதிக்கும் மசோதா, இனி கேபினட் கவுன்சில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். கேபினட் கவுன்சில் ஒப்புதல் கிடைத்தவுடன் அதிபர் யூன் சுக் யியோலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதிபர் ஒப்புதல் அளித்ததும் தென்கொரியாவில் நாய்கறி சாப்பிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory