» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனு தாக்கல்

புதன் 27, டிசம்பர் 2023 11:43:35 AM (IST)

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அந்நாட்டு பொது தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018ல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் மேல் சிகிச்சைக்காக, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டன் சென்றார்.பாக்.,கில் இம்ரான் கான் தலைமையிலான பாக்., தெஹ்ரீக் - இ - இன் சாப் கட்சி ஆட்சி நடந்தததை அடுத்து, நவாஸ் ஷெரீப் லண்டனிலேயே தங்கியிருந்தார்.

தற்போது அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி நடப்பதை அடுத்து கடந்த அக்டோபரில் நாடு திரும்பினார்.இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் அவர் வாழ்நாள் தகுதி நீக்க தண்டனை பெற்ற நிலையில், அந்த வழக்குகளில் இருந்து நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ல் நடக்கவுள்ள பாக்., பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் அம்ஜத் பர்வேஷ் கூறியதாவது: 'அவென்பீல்ட் அபார்ட்மென்ட், அல் அஜீஜியா ஸ்டீல் மில்ஸ்' ஊழல் வழக்குகளில் இருந்து நவாஸ் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தகுதி நீக்கம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அவர் லாகூர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். எந்த ஆட்சேபனையுமின்றி அவை ஏற்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory