» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெண்கள் உரிமை அமைப்புகள் எங்கு சென்றார்கள்?: இஸ்ரேல் பிரதமர் கேள்வி

புதன் 6, டிசம்பர் 2023 10:49:36 AM (IST)

இஸ்ரேலியப் பெண்களை பலாத்காரம் செய்த போது பெண்கள் உரிமை அமைப்புகள் எங்கு சென்றார்கள்? என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கேள்வி எழுப்பி உள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபரில் துவங்கியது. ஹமாஸ் இயக்கத்தால் காசாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டுவதற்காக போதைப்பொருள் கொடுத்து உட்கொள்ளச் செய்ததாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியப் பெண்களை பலாத்காரம் செய்த போதும், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட போதும் பெண்கள் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளான நீங்கள் எங்கு சென்றீர்கள்?. 

அனைத்து நாட்டு தலைவர்களும், அரசும் இந்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று  நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory