» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி; 60 பேர் காயம்!

வியாழன் 26, அக்டோபர் 2023 11:05:23 AM (IST)



அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

அமெரிக்காவின் மெய்ன் நகரில் லூயிஸ்டன் எனும் பகுதியில் உணவகம், வால்மார்ட் விநியோக மையம், மதுபான விடுதி எனப் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்ரோஸ்கோகின் நகர காவல்துறை சந்தேக நபரின் 2 புகைப்படங்களை வெளியிட்டது. அதில் அந்த மர்ம நபரின் கையில் ரைஃபில் துப்பாக்கியுடன் இருப்பது பதிவாகியிருந்தது. 

துப்பாக்கியுடன் இருந்த நபரின் பெயர் ராபர்ட் கார்டு என்பது தெரிய வந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை தேடப்படும் பயங்கர ஆபத்தான நபராக காவல்துறை அறிவித்துள்ளது. அந்த நபர் இன்னும் காவல்துறையில் சிக்காத காரணத்தால் மெய்ன் நகரம் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் அனைவரும் மத்திய மெய்ன் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையும் அதனை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் அதிகம். உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில் தான் உள்ளன. அமெரிக்க துப்பாக்கி வன்முறைகள் தொடர்பான ஆவணக் காப்பகக் குறிப்பின்படி 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 25,198 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

சராசரியாக ஒரு நாளைக்கு 118 பேர் வீதம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 170 பேர் குழந்தைகள் 879 பேர் பதின்ம வயதினர் ஆவர். இந்த 25 ஆயிரம் பேரில் 14 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாவர். 2023 தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் வரை சராசரியாக நாளொன்றுக்கு 66 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory