» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை: இலங்கை அரசு அறிவிப்பு

செவ்வாய் 24, அக்டோபர் 2023 11:12:25 AM (IST)

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்ற புதிய அறிவிப்பை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

இந்த திட்டத்தை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், இந்த ஏழு நாடுகளுக்கும்  நிரந்தரமாக விசா தேவையில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கவுள்ளது.

இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம்,  ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory