» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் 2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திங்கள் 23, அக்டோபர் 2023 10:43:33 AM (IST)



ஈரானில் இரு பெண் பத்திரிகையாளா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலீஸ் காவலில் உயிரிழந்த மாஷா அமீனி தொடா்பான செய்தியை வெளியுலகுக்குக் கொண்டுவந்தவா்களில் குறிப்பிடத்தக்கவா்களான இவா்கள் மீது அமெரிக்க அரசுக்கு ‘ஒத்துழைப்பு’ அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரானின் சா்ச்சைக்குரிய ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குா்து இனத்தைச் சோ்ந்த மாஷா அமீனி என்ற பெண், கடந்த ஆண்டு செப்டம்பரில் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தாா். தலையை மறைக்கும் வகையிலான ஆடையைச் சரியாக அணியாததால் மாஷா அமீனியை காவலா்கள் கைது செய்தாா்கள் என்ற செய்தியை நிலோஃபா் ஹமேதியும், மாஷா அமீனியின் இறுதிச்சடங்கு தொடா்பான செய்தியை எலாகே முகமதியும் வெளியிட்டனா். மாஷா அமீனியின் மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா்கள் இருவரும் ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா். அமெரிக்க அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தல், தேசியப் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுதல், அரசுக்கு எதிரான பிரசாரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும் டெஹ்ரான் நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளதாக நீதித் துறை செய்தி இணையதளமான ‘மைஷான்’ தெரிவித்தது.

இந்தத் தண்டனையை எதிா்த்து இருவரும் 20 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும். இந்தப் பத்திரிகையாளா்கள் இருவருக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான விருதை அமெரிக்கா கடந்த மே மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory