» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேலுக்கு நவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அனுப்புகிறது அமெரிக்கா

ஞாயிறு 22, அக்டோபர் 2023 6:51:42 PM (IST)



ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அனுப்ப உள்ளது. 

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காசா மீது தரைவழி தாக்குதலை தொடர இஸ்ரேல் தயாராக உள்ளது. இந்த சூழலில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த 'தாட்' Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளது. இஸ்ரேலில் ஏற்கனவே ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் 'அயன் டோம்' பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory