» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு எதிரான ஊழல் வழக்கு கைவிடப்பட்டது!

வெள்ளி 20, அக்டோபர் 2023 11:18:46 AM (IST)

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.

இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கடும் கொந்தளிப்புக்கு ஆளான இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் பல மாதங்களுக்கு நீடித்தது. உச்சக்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனிடையே அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பல நாட்கள் அங்கு தங்கியிருந்த போராட்டக்காரர்கள் அங்கு ரூ.1 கோடியே 70 லட்சத்தை கண்டெடுத்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் அந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அதிபர் மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

கொழும்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதனிடையே கோத்தபய ராஜபக்சே அந்த பணம் தன்னுடையது என்றும், அதை திருப்பி தரும்படியும் கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் கோர்ட்டு அதை நிராகரித்து விட்டது.இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்கை கைவிடுவதாக இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று அறிவித்தது. கோத்தபய ராஜபக்சே மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக கொழும்பு கோர்ட்டில் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory