» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவிலிருந்து 41 தூதர்களை திரும்பப் பெற்றுவிட்டோம் - கனடா அறிவிப்பு!

வெள்ளி 20, அக்டோபர் 2023 10:31:29 AM (IST)

இந்தியாவிலிருந்து 41 தூதர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் திரும்பப் பெற்றதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடா்பு உள்ளதாக அந்நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் பகிரங்கமாக குற்றம்சாட்டினாா். அத்துடன், இந்திய தூதரக உயரதிகாரி ஒருவா் நாட்டைவிட்டு வெளியேறவும் கனடா அரசு உத்தரவிட்டது.

ஆனால், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் உள்ளதாக குறிப்பிட்டு, அவற்றை நிராகரித்த இந்தியா, கனடா தூதரக உயரதிகாரி வெளியேற உத்தரவிட்டது. மேலும், அந்நாட்டினருக்கு நுழைவு இசைவு வழங்குவதையும் இந்தியா நிறுத்தியது.இந்த விவகாரத்தால் இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதரகத்தில் இருந்து 41 தூதர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் திரும்பப் பெற்றதாக கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்தியாவிலிருந்து பாதுகாப்பாக புறப்படுவதற்கு தேவையான வசதிகளையும் நாங்கள் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ள ஜோலி, இதற்கான பொருள் எங்களுடைய தூதர்களும் அவர்களது குடும்பத்தினரும் இப்போது தூதரக அலுவலகங்களை விட்டு புறப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ளார். 

தூதரக அதிகாரிகள் எங்கிருந்து வந்தாலும், எங்கு அனுப்பப்பட்டாலும் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூதர்கள் இருக்கும் நாட்டிலிருந்து பழிவாங்கப்படுதல் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் இல்லாமல் தங்கள் வேலையைச் செய்ய சர்வேத சட்டங்கள் அனுமதிக்கின்றன."

ஒவ்வொரு நாடும் அந்த விதிகளுக்கு உட்பட்டால் மட்டுமே அவை செயல்படும். ராஜதந்திர சிறப்புரிமை மற்றும் விலக்குகளை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்வது சர்வதேச சட்டத்திற்கு முரணானது. இது தெளிவான சர்வதேச சட்ட மீறலாகும். கனடாவிற்கு பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் கிடையாது.  கனடா தொடர்ந்து ச்ரவதேச சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடரும் என்று அவர் கூறினார்.

மேலும்,  இந்தியாவின் முடிவு இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களுக்கான சேவை வழங்கல் அளவை பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள எங்கள் தூதரகங்களில் உள்ள அனைத்து தனிப்பட்ட சேவைகளையும் நாங்கள் நிறுத்த வேண்டியது துரதிருஷ்டவசமானது என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory