» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்

சனி 7, அக்டோபர் 2023 5:05:01 PM (IST)



இஸ்ரேல் மீதான பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதன் காரணமாக மேற்குகரையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளவெர்லி வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் நடத்தும் கொடூரமான தாக்குதல்களை இங்கிலாந்து வண்மையாக கண்டிக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை இங்கிலாந்து எப்போதும் ஆதரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மக்கள் மீதான இந்த தாக்குதல், ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் மக்களுடன் பிரான்ஸ் அரசு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அனாலேனா பேர்பாக், காசா நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

இந்தியன்Oct 9, 2023 - 09:42:12 AM | Posted IP 162.1*****

காஸ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தானிய தீவிரவாதி பண்ணிக்களைப் போல், இஸ்ரயேலில் ஊடுருவிய பாலஸ்தீனிய மதவெறி ஹமாஸ் தீவிரவாத பண்ணிகளுக்கு அழிவுகாலம் நிச்சயம் வரும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory