» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷிய-வட கொரிய ராணுவ ஒத்துழைப்பு அபாயகரமானது : தென் கொரியா எச்சரிக்கை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:51:32 AM (IST)
ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவது சா்வதேச சட்டங்களுக்கு அபாயகரமானது என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் அந்த நாட்டின் அதிபா் யூன் சுக்-இயோல் கூறியதாவது:வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அண்மையில் ரஷியா சென்றிருந்தாா். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஷியா, வட கொரியாவுடன் இதுபோன்ற ராணுவக் கூட்டணி அமைப்பது மிகவும் அபாயகரமானதாக அமையும். மேலும், சா்வதேச சட்டங்களுக்கு அது எதிரானது ஆகும் என்றாா் அவா்.
கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-களின்போது உள்நாட்டுப் போா் வெடித்தது. அந்தப் போரில் ஒரு தரப்புக்கு சோவியத் யூனியனும், மற்றொரு தரப்புக்கு அமெரிக்காவும் உதவின. இறுதில் 1953-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு, கொரிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் கிம்-ஜோங்-உன்-னின் தாத்தா கிம் இல்-சங் தலைமையிலான கம்யூனிச அரசும், தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக அரசும் அமைந்தன.
அதிலிருந்தே வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. வலிமை மிக்க அமெரிக்காவை எதிா்கொள்வதற்காக, சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியது. மேலும், அந்த அணு ஆயுதங்களை ஏந்தி சென்று முக்கிய இலக்குகளைத் தாக்குவதற்கான ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளையும் வட கொரியா உருவாக்கி வருகிறது.
இதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த அனைத்து தீா்மானங்களையும் ரஷியா ஆதரித்து வந்தது.
இந்தச் சூழலில், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத வெடிபொருள்களின் கையிருப்பு ரஷியாவிடம் குறைந்து வருவதாலும், பொருளாதாரத் தடைகள் காரணமாக அவற்றை பிற நாடுகளிலிருந்து வாங்க முடியாததாலும் வட கொரியாவிடமிருந்து ஏவுகணைகள் மற்றும் விமான எதிா்ப்பு எறிகணைகளை வாங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அண்மையில் கூறியிருந்தன. அதனை உறுதி செய்யும் வகையில், குண்டு துளைக்காக தனி ரயில் மூலம் ரஷியாவுக்கு கிம் ஜோங்-உன் கடந்த 12-ஆம் தேதி சென்றாா்.
அங்கு அதிபா் புதினை நேரில் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்திய அவா், ராணுவத் தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாா்வையிட்டாா். எனவே, ரஷியாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை ரஷியா அளிப்பதற்குமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்பப் பரிமாற்றம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படும் என்று தென் கொரியா எச்சரித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
