» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் அடைய முடியவில்லை: நவாஸ் ஷெரீப் பேச்சு
புதன் 20, செப்டம்பர் 2023 12:37:54 PM (IST)
இந்தியா நிலவை அடைந்தபோது, பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தது என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியுள்ளார்.

இந்தியா அடைந்த சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் அடைய முடியவில்லை? இதற்கு யார் பொறுப்பு? என கேட்டுள்ளார். தொடர்ந்து அவர், இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, ரூ.8,300 கோடி அவர்களுடைய கைவசம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.49.94 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. இரட்டை இலக்க பணவீக்கம் எதிரொலியாக ஏழைகள் நெருக்கடியில் தள்ளப்பட்டு உள்ளனர். விலைவாசி, எரிபொருள் உயர்வை சந்திக்க முடியாமல் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாட்டை மீட்டெடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவாக, ரூ.24,973 கோடியை விடுவிக்க சர்வதேச நிதியம் முன்வந்தது. இவற்றில், ரூ.9,989 கோடியை பாகிஸ்தானுக்கு பரிமாற்றம் செய்தது. எனினும், தொடர்ந்து அந்நாடு பொருளாதார சரிவில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
