» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் தேவை இல்லை: ‍ சீனா அறிவிப்பு

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 5:28:42 PM (IST)

வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் தேவை இல்லை என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று முதன்முதலாக 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன்படி தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பதை பல நாடுகள் கட்டாயமாக்கின.

ஆனால் கரோனா தடுப்பூசி, முகக்கவசம் போன்றவற்றால் அதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. எனவே கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சீன அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory