» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜிம்பாப்வே அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியீடு: மீண்டும் அதிபர் ஆனார் எம்மர்சன்!

திங்கள் 28, ஆகஸ்ட் 2023 5:08:24 PM (IST)



ஜிம்பாப்வே அதிபர்  தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி எம்மர்சன் மீண்டும் அதிபர் ஆனார்.

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24-ந்தேதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் 44 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். எனினும் தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதாக கருதி இந்த முடிவினை அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory