» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பள்ளிகளில் மத ரீதியிலான உடை அணிய தடை : பிரான்ஸ் அரசு உத்தரவு

திங்கள் 28, ஆகஸ்ட் 2023 5:04:51 PM (IST)

பிரான்ஸ் நாட்டில் அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகள், அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தலைப்பகுதியை மூடும் உடையான ஹெட்ஸ்கர்ப் உடைக்கு 2004ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் மூடும் இஸ்லாமிய உடையை பொது இடங்களில் அணிய 2010ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பிரான்ஸ் பள்ளிகளில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் உள்ள அரசுப்பள்ளிகளில் இஸ்லாமிய மத உடையான அபயா ஆடையை அணியை தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி புதிய பள்ளி ஆண்டு தொடங்குகிறது. அன்று முதல் பிரான்ஸ் அரசுப்பள்ளிகளில் மாணவிகள், ஆசிரியைகள் அபயா ஆடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பள்ளிகளில் அபயா ஆடை அணியும் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அது மதம் சார்ந்த உடை என்பதால் அதை அணிய தடை விதிக்க வேண்டும் என்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பள்ளிகளில் இஸ்லாமிய மத உடையான அபயா ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அபயா என்பது இஸ்லாமிய பெண்கள் அணியும் ஆடையாகும். தலை முதல் கால் வரையில் முழுவதும் மூடும் வகையிலான உடையாகும். முகம் மட்டும் தெரியும்படி இந்த உடை வடிவமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

இந்தியன்Aug 29, 2023 - 02:30:04 PM | Posted IP 162.1*****

சூப்பர். இங்கே சில இடத்தில மதவாதிகளால் புர்கா தொல்லை தாங்க முடியாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory