» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பள்ளிக்கு மாணவர் வரவில்லை என்றால் பெற்றோருக்கு சிறை : சவுதி அரசு அதிரடி!

சனி 26, ஆகஸ்ட் 2023 6:55:36 PM (IST)

சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் பள்ளிக்கு எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்கள் வராமல் இருந்தால் அவரது பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும். அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பும். பெற்றோர் அலட்சியத்தால் மாணவர் பள்ளிக்கு வராதது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில் ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2-வது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3-வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும். 15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். 20 நாட்கள் வராத பிறகு கல்வித்துறை சட்ட நடவடிக்கையை தொடங்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory