» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் இணைவு: தென்னாப்பிரிக்க அதிபர் ரமாபோசா அறிவிப்பு!

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 4:54:47 PM (IST)



பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அறிவித்துள்ளார். 

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் செவ்வாய்க் கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு புதன்கிழமை அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த உறுப்பினர் சேர்க்கை ஜனவரி 1,2024 முதல் கூட்டமைப்பில் இணைகின்றனர். 

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேரும் ஆறு நாடுகளையும் வரவேற்பதாகவும், ஒவ்வொரு நாட்டின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒவ்வொரு நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய உறவும், வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. ஆர்வத்தை வெளிப்படுத்தும் நாடுகளைச் சேர்ப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory