» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானில் மக்கள்தொகையை அதிகரிக்க ரூ.2.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - அரசு அறிவிப்பு

வியாழன் 27, ஜூலை 2023 12:16:28 PM (IST)



ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளின் ஒன்றாக ஜப்பான் உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் ஜப்பான் திகழ்கிறது. இந்தநிலையில் இங்கு மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சுமார் 12½ கோடி மக்கள்தொகையே பதிவாகி உள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

இது கடந்த ஆண்டை காட்டிலும் 0.65 சதவீதம் அதாவது 8 லட்சம் பேர் குறைவு எனவும் கூறப்படுகிறது. இந்த கணக்கில் ஜப்பான் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் சுமார் 30 லட்சம் வெளிநாட்டினரும் அடங்குவர். இதனை நாட்டின் அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் கிஷிடா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில் சுமார் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி நிதியை ஜப்பான் அரசு ஒதுக்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory