» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ! 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்: இத்தாலி ஏர்ப்போர்ட் மூடல்!

புதன் 26, ஜூலை 2023 11:55:01 AM (IST)



கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் இத்தாலியில் விமான நிலையம் மூடப்பட்டது.

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் ஆண்டுதோறும் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகளில் அதீத மழைப்பொழிவும், கடுமையான வறட்சியும் மாறி மாறி நிலவுகின்றன. கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் சமீப காலமாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் கிரீசின் சில இடங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியை தாண்டியை வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் அங்குள்ள ரோட்ஸ் தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி அதன் அருகில் உள்ள கோர்பு மற்றும் எவியா தீவுகளுக்கும் பரவி வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி அங்கிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே இந்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 500 வீரர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் அங்கு அனுப்பி உள்ளன.

இதேபோல் இத்தாலியிலும் அதிக வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் புகைமண்டலம் போல காட்சி அளிக்கிறது. எனவே அங்குள்ள பலேர்மோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான பயணங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர். இதற்கிடையே வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory