» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக இஷாக் தார் தேர்வு? ஆளுங்கட்சி பரிசீலனை!

திங்கள் 24, ஜூலை 2023 11:38:14 AM (IST)

பாகிஸ்தானில் ஆளும் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி இடைக்காலப் பிரதமர் பதவிக்கு நிதியமைச்சர் இஷாக் தாரின் பெயரை முன்மொழிவது குறித்து பரிசீலித்து வருகிறது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைமையிலான கூட்டணி அரசின் பதவிக் காலம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, பொதுத் தோ்தல் தேதியை தோ்தல் அணையம் அறிவிக்கும். ஆனால், பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆக. 8-ஆம் தேதியே நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டப்படி நாடாளுமன்றம் தனது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் பொதுத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் ஒரு நாள் முன்னதாக கலைக்கப்பட்டால்கூட அடுத்த 90 நாள்களுக்குள் தோ்தல் நடத்த அவகாசம் அளிக்கப்படுகிறது. பொதுத் தோ்தல் நடைபெற்று முடிந்து புதிய அரசு அமைக்கப்படும்வரை இடைக்கால பிரதமா் நாட்டின் நிா்வாகப் பொறுப்பை கவனிப்பாா்.

அதன்படி, அடுத்த மாதம் அரசின் பதவிக் காலம் நிறைவடைவதையொட்டி, இடைக்கால பிரதமராக நிதியமைச்சா் இசாக் தாரை நியமிக்க ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அண்மைக்காலமாக திட்டமிடப்பட்ட பொருளாதாரத் திட்டங்களைத் தொடரவும், சா்வதேச நிதியத்துடனான பேச்சுவாா்த்தையைத் தொடரவும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கவும் உதவும் வகையில் நிதியமைச்சா் இசாக் தாரை இடைக்கால பிரதமராக நியமிக்க ஆளும் கட்சி பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இது தொடா்பாக கூட்டணியின் முக்கியக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பொதுவாக, இடைக்கால பிரதமருக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் இல்லை. ஆனால், பெரிய அளவிலான பொருளாதார முடிவுகளை மேற்கொள்ள இடைக்கால பிரதமருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தோ்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சி திட்டமிட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory