» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மணிப்பூரில் கலவரத்தை நிறுத்த நடவடிக்கை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

வியாழன் 20, ஜூலை 2023 11:29:51 AM (IST)



மணிப்பூரில் கலவரத்தை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் மே 3 ஆம் தேதி நடைபெற்ற பேரணி இனக் கலவரமாக மாறி கடந்த 2 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எந்த கருத்து கூறாமல் இருக்கும் சூழலில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கலவரத்தை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இத்தகைய பதற்றமான சூழலில், வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் மே 4 ஆம் தேதி கங்போக்பி மாவட்டத்தில் மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரரை கலவரக்காரர்கள் கொன்றுள்ளனர். இந்த காணொலியை கண்ட மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory