» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் வாக்னர் குழு என்ற அமைப்பே இல்லை: புதின் பேச்சால் புதிய சர்ச்சை

சனி 15, ஜூலை 2023 10:32:31 AM (IST)

ரஷியாவில் வாக்னர் குழு என்ற அமைப்பே இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory