» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

வியாழன் 13, ஜூலை 2023 5:22:55 PM (IST)



இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் கேம்ரான் அழைப்பை ஏற்று பாரிசில் நாளை நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, நம் நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவுக்கு இணையானது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதையடுத்து, இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்கான ஒப்புதல் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

சங்கிகளுக்கு எப்படி புரிய வைக்க ?Jul 16, 2023 - 12:55:21 PM | Posted IP 162.1*****

மோடி கிறிஸ்தவ நாட்டுக்கு போறாங்களாம் அந்த நாட்டு கிறிஸ்தவர்கள் மோடியை சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறாங்களாம், இங்கு (இந்தியாவில்) சில கிறிஸ்தவர்களை தாக்குவார்களாம், அவர்களை என்னத்த சொல்ல?

INDIANSJul 14, 2023 - 04:02:45 PM | Posted IP 172.7*****

JAIHIND

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory