» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐரோப்பா நாடுகளில் ஒரே ஆண்டில் வெப்பத்துக்கு 61,000 பேர் பலி!

செவ்வாய் 11, ஜூலை 2023 9:36:02 PM (IST)



ஐரோப்பா நாடுகளில் கடந்தாண்டு மட்டும் வெப்பத்துக்கு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர். ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொருபுறம் வெப்பம் தாங்காமல் மக்கள் செத்து மடிகின்றனர்.இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்தாண்டு கோடைக் காலமான மே 30 முதல் செப்டம்பர் 4 வரை வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 18 முதல் 24 வரையில் மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்த பெண்கள். இளம் வயதினரை பொறுத்தவரை ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory