» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து கத்தியால் கொடூர தாக்குதல்: 6 பேர் பலி

செவ்வாய் 11, ஜூலை 2023 11:33:21 AM (IST)



சீனாவில் மழலையர் பள்ளிக்குள் மர்ம நபர் கத்தியால் கொடூரமாக தாக்கியதில் 3 மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தென் கிழக்கு சீனாவின் குவாங்டாங் மாகாணம் லியான்ஜியாங் நகரில் ஒரு மழலையர் பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடம் நேற்று வழக்கம்போல் செயல்பட்டது. இதனால் தங்களது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக காலையில் பெற்றோர் சென்றிருந்தனர்.

அப்போது பள்ளிக்கு வந்திருந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார்.

மேலும் அங்கிருந்த மாணவர்கள், பெற்றோரையும் அவர் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் ஆசிரியர்-3 மாணவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பள்ளிக்கு வெளியே நின்றபோது ஆசிரியரின் கார் அந்த மாணவன் மீது லேசாக மோதியதும், இதனை அவனது தந்தை தட்டிக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கத்தியால் குத்தி கொன்றதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசிரியர் மற்றும் மாணவர்களை அவர் கத்தியால் குத்தி கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory