» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசிலில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து; 8 பேர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்!

சனி 8, ஜூலை 2023 10:49:00 AM (IST)



பிரேசிலில் 4 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. 

பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாண தலைநகரான ரெசிஃப் நகரில் ஜங்கா என்ற பகுதியில் நான்கு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் நேற்று காலை 6 மணியளவில் இடிந்து விழுந்தது. கவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் விரைந்து ஈடுபட்டனர். 

கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு ஆண், 8 மற்றும் 5 வயது குழந்தைகள் உட்பட 8 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர், அதே நேரத்தில் 65 வயது பெண் மற்றும் 15 வயதுடைய இருவர் என 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட 5 பேரைக் காணவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

கட்டடத்தின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்துள்ளது, மற்றொரு பகுதி பாதியளவுக்கு இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்னர்.  அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் கடலோர நகரமான ரெசிஃப் நகரில் சமீப நாட்களாக கடும் மழையுடன் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory